வன்னி யுத்தத்தில் 40 ஆயிரம் மக்களை கொன்று குவித்து 3 இலட்சம் மக்களை வேரோடு பிடுங்கி எடுத்து முகாம்களில் அடைத்த மஹிந்த அரசு, அதனை செய்த தன்னுடைய ஏவல் பிசாசுகளான படைவீரர்களுக்கென 25 இலட்சம் ரூபா செலவில் வீடமைத்து கொண்டிருக்கின்றார் மஹிந்த!
கொல்லப்பட்ட மக்களின் உறவுகளுக்கோ அல்லது வேரோடு விரட்டியடிக்கப்பட்ட மக்களுக்கோ இன்னமும் நட்ட ஈடுகளையோ இழப்புக்களையோ கொடுக்கவில்லை. அவர்களை மரங்களின் கீழும் தரையிலும் விட்டுவிட்டு மக்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய தன்னுடைய ஏவல் பிசாசுகளுக்கு 25 இலட்சம் ரூபா செலவில் வீடமைத்து கொண்டிருக்கின்றார் மஹிந்த!
பாதிப்பு அடிப்படையில் பார்த்தால் கூட அரசாங்கம் தான் தமிழர்களின் அளிவுகளுக்கு பொறுப்பெடுத்து மக்களிற்கு புனர்வாழ்விற்கான வசதிகளை செய்ய வேண்டும். ஆனால் அரசாங்கம் அதனை செய்யவில்லை. மாறாக சிங்கள படைகளுக்கு அதிகசெலவில் நவீன வடிவமைப்பில் வீடுகளை கட்டிக்கொடுப்பதையே தனது வேலைத்திட்டமாக கொண்டிருக்கிறது.
இந்த திட்டத்திலும் எதாவது கமிசனோ தெரியவில்லை ஏனெனில் அந்தளவு வேகத்தில் படையினருக்கான வீடமைப்பு போய்க்கொண்டிருக்கின்றது. முதற்கட்டமாக 700 மில்லியனை இந்த பணிக்கு மஹிந்த சேகரித்து கொடுத்துள்ளார்.
எல்லோருமே தன் மக்கள் எனக்கூறும் மஹிந்த தமிழர்களுக்கு இன்னமும் உதவமுன்வராதது ஏன்? தொடர்ந்தும் அடிமைகளாகவும், கைதிகளாகவும் தமிழர்களை வைத்திருப்பது ஏன்?

அழிந்தவர்களுக்கு




0 கருத்துக்கள்:
கருத்துரையிடுக