புதன்கிழமை நாட்டில் வன்முறைகள் வெடிக்கலாம் - சிறிலங்கா காவல்துறை.

5.9.10

அரசியலமைப்பின் 18வது திருத்தம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் போது நாட்டில் பாரிய வன்முறைச் சம்பவங்கள் நிகழலாம் என்று சிறிலங்கா காவல்துறை எச்சரித்துள்ளது. எனினும் எத்தகைய வன்முறைச் சம்பவங்களும் நிகழாத வகையில் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு சிறிலங்கா காவல்துறை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எதிர்வரும் புதன்கிழமை அரசியலமைப்பின் 18வது திருத்தம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது. அன்றையதினம் ஜே.வி.பி போன்ற எதிர்க்கட்சிகள் வன்முறைகளைத் தூண்டி விடலாம் என்று சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
எனவே, வன்முறைகள் ஏதும் நிகழாமல் தடுப்பது குறித்து காவல்துறை மா அதிபர் மகிந்த பாலசூரிய நேற்று மூத்த காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். புதன்கிழமை நாடாளுமன்றம் நோக்கிய வீதிகளில் பாதுகாப்புக்காக இராணுவமும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிக பாதுகாப்பு வழங்குவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள்: