அரசியல் அமைப்பு திருத்தத்தை பணமே முடிவு செய்கிறது.

6.9.10


ஆதரவாக வாக்களிக்கும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 500 முதல் 1000 கோடி ரூபா வரையில் பணம் வழங்கப்பட உள்ளதாக பிரபல சிங்கள இணையமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினரின், தகுதி, திறமை மற்றும் கட்சியில் காணப்படும் செல்வாக்கு ஆகியவற்றின் அடிப்படையில் தொகை உயர்த்தப்படும் என அந்த இணையம் சுட்டிக்காட்டியுள்ளது.எதிர்க்கட்சி உறுப்பினர்களுடனான பேரம் பேசும் நடவடிக்கைகளை சில சிரேஸ்ட உறுப்பினர்கள் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசியல் அமைப்பு திருத்தங்களுக்கு ஆளும் கட்சியில் சிலர் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் அதனை பகிரங்கமாக வெளிப்படுத்த முடியாத நிலைமையில் அவர்கள் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த அரசியலமைப்பு திருத்தங்கள் ஜனாதிபதியின் தனிப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக அமுல்படுத்தப்பட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள்: