தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதை விட பிளவுகளை ஏற்படுத்துவதில் அரசாங்கம் முனைப்பு.

27.8.10

தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதனை விடவும் பிளவுகளை ஏற்படுத்துவதில் அரசாங்கம் அதிக முனைப்பு காட்டி வருவதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
யுத்தம் நிறைவடைந்து ஒரு வருடத்திற்கு மேல் கடந்துள்ள நிலையிலும் அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அக்கறை காட்டவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக அரசியல் கட்சிகள் அதிகளவு முயற்சி மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மக்களின் உண்மையான அபிலாஷைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கு தமிழர்கள், வடக்கு கிழக்கிற்கு வெளியே வாழும் தமிழர்கள், கொழும்புத் தமிழர்கள், வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழர்கள் என பல்வேறு வழிகளில் தமிழர்களுக்கு இடையில் பிளவினை ஏற்படுத்த ஆளும் கட்சி உள்ளிட்ட சில தரப்பினர் முனைப்பு காட்டி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களுக்கு கிடைக்கப்பட வேண்டிய உண்மையான உரிமைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். யுத்தத்தையும் பயங்கரவாதத்தையும் காட்டிக் காட்டி காலத்தை ஓட்டியவர்கள் தற்போது அபிவிருத்தி என்ற போர்வையில் தங்களது காலத்தை ஓட்டக் கற்றுக்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 கருத்துக்கள்:

ponnusamy சொன்னது…

ethy velai. divide and rule srilankan dogs are masters at