வடக்கு, கிழக்கு மருத்துவமனைகளைத் தரமுயர்த்த சீனா 7410 கோடி ரூபா நிதியுதவி

22.8.10

வடக்கு,கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளைப் புதுப்பிக்கவும், அவற்றின் வசதிகளை மேம்படுத்தவும் சீன அரசாங்கம் 7410 கோடி ரூபாவை சிறிலங்காவுக்கு வழங்கியுள்ளது.
சிறிலங்காவின் சார்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் ரவீந்திர ருபேருவும், சீனாவின் சார்பில் சீன உதவி நிறுவனத்தின் தலைவர் யங் லிஜிங்கும் இது தொடர்பான உடன்பாட்டில் நேற்று கையெழுத்திட்டனர்.
சீனா வழங்கும் நிதியுதவி மருத்துவமனைகளுக்கான கருவிகளை வாங்குவதற்கும், புதிய கட்டங்களை அமைப்பதற்கும், மருத்துவமனைகளில் உள்ள வசதிகளை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படவுள்ளது,
வடக்கு,கிழக்குப் பகுதிகளில் போரினால் பாதிக்கப்பட்ட மருத்துவமனைகளைத் தரமுயர்த்தும் நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்து விட்டதாகவும் - சீனா வழங்கியுள்ள இந்த நிதியுதவி இந்தத் திட்டத்தை மேலும் விரைவுபடுத்த உதவும் என்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

0 கருத்துக்கள்: