தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு அமைச்சர் கோரிக்கை.

31.3.10

சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, தடுத்து வைக்கப்பட்டுள்ள 11,000 தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாதென அரசாங்கம் அறிவித்துள்ளது.
விடுதலைப் புலி உறுப்பினர்களை எவ்வித விசாரணைகளும் இன்றி விடுதலை செய்யுமாறு டக்ளஸ் தேவானந்தா கோரியுள்ளார்.
அரசாங்கப் படையினரால் தற்போது தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 60 வீதமான நபர்கள் கரும்புலி மற்றும் ஆயுதப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என இராணுவப் புலனாய்வுப் பிரிவு அறிவித்துள்ளது.

0 கருத்துக்கள் :